திருவள்ளூரில் கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பான மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி: கலெக்டர் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பான மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி:  கலெக்டர் நேரில் ஆய்வு :


திருவள்ளுர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பான மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.


 

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரான வைரஸ் தொற்றுக்கு பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைத்து வணிக வளாகங்கள், நிறுவனங்கள் மூடிவைக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.


மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மருத்துவ பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவர் அனுமதிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகளையும், தேவையான மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு குறித்து விரிவாக ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.


 மேலும் கொரான வைரஸ் தொற்றுக்கு எதிராக களத்தில் வீரத்துடன் களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவம் மற்றும் சுகாதார துறை,  வருவாய் துறை, காவல் துறை, நகர்புற மற்றும்  ஊரக உள்ளாட்சி துறை, பல்வேறு அரசு துறைகள், விமான துறை, ஊடகவியலாளர்கள், பேருந்து,ரயில், ஆட்டோ, வீடு தேடி வந்து அத்தியாவசியப் பொருட்களை விநிகிப்பவர்கள் என தன்னலமற்ற சேவை புரிபவர்களை பாராட்டும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு ஒன்றுகூடி தங்கள் வீட்டு வாசல் மற்றும் மாடிகளில் நின்றுக் கொண்டு 5 நிமிடங்களுக்கு மரியாதை மற்றும் நன்றிகளை தெரிவிக்கும் விதமாக கைகளை தட்டுவது அல்லது வீட்டின் மணியை ஒளித்து நன்றி கூறலாம் என்று கூறினார்.

 

இதில் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன், கண்காணிப்பாளர் சேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ், மருத்துவமனை நிலை அலுவலர் ராஜ்குமார்,சைதன்யர், திருவள்ளுர் வட்டாட்சியர் விஜயகுமாரி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
விருத்தாசலம் பேருந்துநிலையத்தில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
Image
புதுச்சேரி மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image