மிஷன் யுமானிடியர் இந்தியா மற்றும் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மொரட்டாண்டி டோல்கேட் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் மக்களுக்கும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் மக்களுக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்தும் , கை கழுவும் முறை பற்றியும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வானூர் அரசு வட்டார மருத்துவ குழுவினர் மற்றும் டாக்டர். பிரசாத் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். கிளியனூர் அரசு மருத்துவக் குழுவினர் மற்றும் மிஷன் யுமானி டியர் இந்திய சேர்மன் சந்தோஷ் குமார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் குழு மருத்துவர் டாக்டர். விஜயபாஸ்கர் மற்றும் மிஷன் யுமானிடியர் இந்தியா ஊழியர்கள் முருகன், சங்கர், ரஞ்சிதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
" alt="" aria-hidden="true" />